நயன்தாராவுக்கு மட்டுமே சாத்தியமான சாதனை

7 November 2020, 7:50 pm
Quick Share

தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஒரு படம் வெளியாவதே பெரிய விஷயமாக இருக்கிறது. அதே நிலைமை தான் தமிழின் முன்னணி கதாநாயகிகளுக்கும். இப்படி இருக்கும் நிலையில் ஒரு கதாநாயகிக்கு ஒரே பண்டிகை தினத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளது.

தற்போதைய லேடி ‘சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா தான் அந்த நடிகை. 2006 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ‘ஈ’, ‘வல்லவன்’, ‘தலைமகன்'(சரத் குமார் நடிப்பில் வெளியான 100 வது திரைப்படம்) ஆகிய படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களிலும் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் கடைசியாக ஒரே நாளில் மூன்று படங்கள் கொடுத்த ஒரே நாயகி நடிகை நயன்தாரா தான். இன்றைய கதாநாயகிகள் மத்தியில் இந்த சாதனை நிச்சயம் நயன்தாராவுக்கும், நயன்தாரா ரசிகர்களுக்கும் இது ஒரு சந்தோசமான நிகழ்வு தான்.

Views: - 25

0

0

1 thought on “நயன்தாராவுக்கு மட்டுமே சாத்தியமான சாதனை

Comments are closed.