விக்கி கிட்ட வா.. கொஞ்சம் நில்லு.. ரசிகர்களின் கவனம் ஈர்த்த நயன்தாராவின் ரொமான்டிக் வீடியோ..!

Author: Vignesh
13 July 2024, 5:40 pm

பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தலான நடிப்பையும் கவர்ச்சியும் வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார். என்னதான் நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், ஜவான் படத்திற்கு பின்னர் தான் அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு சென்று விட்டது என்று சொல்லலாம். அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றதாம்.

nayanthara - updatenews360.jpg 2

முன்னதாக கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வரும் நயன்தாராவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பல கிசுகிசுக்கள் இருந்து வந்தது. அதாவது, சிம்பு மற்றும் பிரபுதேவா உடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியதற்குப் பின் பேட்டிகள் கொடுப்பதிலும் பட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதிலும் நயன்தாரா தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், நயன்தாரா அம்பானி மகன் திருமணத்திற்கு தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் ட்ரெடிஷனல் லுக்கில் சென்றிருந்தார். கோல்டன் சேலையில் இருந்த லேடி சூப்பர் ஸ்டார் நயனுக்கு விக்னேஷ் சிவன் நச்சென்று முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியானது. அதேபோல், புகைப்படம் எடுப்பதற்காக நயன்தாராவை விடுத்து விக்னேஷ் சிவன் சென்ற நிலையில், நயன்தாரா விக்கி கொஞ்சம் நில்லு என்று கூறிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!