வாழ்க்கைனா என்னனு தெரியணுமா? இந்த படத்தை பாருங்க- நயன்தாராவே தூக்கி கொண்டாடும் திரைப்படம்?

Author: Prasad
8 July 2025, 2:25 pm

நடிகை நயன்தாரா சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.  அது என்ன திரைப்படம் என்பதையும் அவர் அப்படி என்ன பாராட்டினார் என்பதையும் தற்போது பார்க்கலாம்

டாப் நடிகை

தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது “மூக்குத்தி அம்மன் 2”,  “ஹாய்”, “ராக்காயி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தான் பல வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆம் ஆண்டு கரம் பிடித்தார் நயன்தாரா. அதனை தொடர்ந்து வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தைவக் என் சிவன் என பெயர் வைத்தது கவனத்தை குவித்தது. 

nayanthara praises paranthu po movie in instagram

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தனது குழந்தைகளுடன் வலம் வரும் புகைப்படங்கள் பல இணையத்தில் அவ்வப்போது வைரலாகியும் வருகின்றன. 

நயன்தாரா பாராட்டிய திரைப்படம்

இயக்குனர் ராமின் இயக்கத்தில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பறந்து போ”. இதில் சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 8 வயது சிறுவனை மையப்படுத்தி எழுதிய கதையம்சத்தில் உருவான இத்திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தை வளர்ப்பு குறித்த சிறந்த திரைப்படம் எனவும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

nayanthara praises paranthu po movie in instagram

இந்த நிலையில் நயன்தாரா தனது இஸ்டா ஸ்டோரியில் இத்திரைப்படத்தை பாராட்டியுள்ளார். “இந்த பரபரப்பான உலகை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மலை ஏறுங்கள் அல்லது குழந்தைகளை பறந்து போ படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை, நாம் வாழ்வில் எதை இழக்கிறோம் என்பதை அழகாக சொல்லியுள்ளது இத்திரைப்படம். நீங்கள் ஒரு சிறந்த இயக்குனர் ராம். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி என அனைவருக்கும் பாராட்டுகள்” என கூறியுள்ளார். நயன்தாரா இவ்வாறு மனம் விட்டு புகழ்ந்தது பலரின் கவனத்தை குவித்துள்ளது. 

  • mansoor ali khan directing a full movie in sanskrit language மன்சூர் அலிகான் இயக்கும் முழு நீள சமஸ்கிருத திரைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்?
  • Leave a Reply