பிரபல காமெடி நடிகர் தற்கொலை முயற்சி..காப்பாற்றிய நயன்தாரா..!
Author: Selvan30 November 2024, 5:55 pm
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் தம்பி ராமையா.இவர் ஒரு நாள் தற்கொலை பண்ண முயற்சி செய்த போது நடிகை நயன்தாரா தான் போன் பண்ணி தடுத்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருப்பார்.
அவர் குடும்பத்தில் ஏற்பட்ட சோகமான நிகழ்வை இதற்கு காரணம் எனவும் அதில் தெரிவித்திருப்பர்.
அதாவது தம்பி ராமையாவிற்கு அவுங்க அம்மாவ ரொம்ப பிடிக்கும்,அம்மா மேல அளவுக்கு மீறி பாசத்தை வைத்திருந்தார்.ஒருநாள் அவருடைய அம்மா திடீரென இறந்து போக அதை கேட்டதும் வாழ்க்கையில் பெரும் அதிர்ச்சியாகி சோகத்தில் உறைந்தார்.
இதையும் படியுங்க: தக் லைஃப் படத்தின் முதல் விமர்சனம்..கங்குவா ரேஞ்சுக்கு பில்ட்அப் விடுத்த நடிகர்..!
அந்த நேரத்தில் அவருடைய மகளுக்கு திருமணம் ஆகி இருந்தது,மகனுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை நம்முடைய குழந்தைகள் தான் ஒரு அளவுக்கு செட்டில் ஆகிவிட்டார்களே என நினைத்து,அம்மா இறந்த துக்கத்தில் மீள முடியாமல் அவரும் தற்கொலை பண்ண முயற்ச்சிக்கலாமா என நினைத்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் நடிகை நயன்தாரா துக்க செய்தியை அறிந்து போன் செய்துள்ளார்.
பிறகு நயன்தாரா எதார்த்தத்தை புரிய வைத்து,அவருக்கு ஆறுதல் சொல்லிய பிறகு தற்கொலை எண்ணத்தை கைவிட்டதாக அந்த பேட்டியில் கூறியிருப்பார்.
இவர் இந்திரலோகத்தில் படத்தில் தற்கொலை செய்ய கூடாது என்ற வசனத்தை எழுதி இருப்பார்,ஆனால் அவரே தற்கொலை முடிவை எடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது