குண்டாக இருந்த நயன்தாரா, எப்படி சிக்கென்று மாறினார்…? நயன்தாராவின் சிம்பிள் டயட் ப்ளான் Revealed…!

12 August 2020, 10:00 am
Quick Share

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.
ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

தற்போது இவர் சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார். பின் தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். தற்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார்.

இவர் வல்லவன் படத்தில் கமிட் ஆன புதிதில், சிம்பு உடம்பை குறை என்று சொன்னதை கப்பென்று பிடித்துக்கொண்ட நயன், பட்டினி கிடந்தாராம். இதனால், அவரது உடல் குறைந்ததே தவிர, Weak ஆக தோற்றமளித்து உள்ளார்.

அதன் பின், கேரளா வைத்தியங்களை உட்கொண்டு, தல அஜித்துடன் பில்லா படத்தில் செம்ம ஸ்டைலிஷாக தோற்றமளித்தார். ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையான உடை, நடை, பாவனை என எல்லோரையும் வாய் பிளக்க வைத்தார் பில்லா நயன்தாரா. அன்று முதல் இப்போது வரை சிக்கென்று தான் இருக்கிறார்.

தற்போதைய டயட் ப்ளான் என்ன என்று நயன்தாராவே கூறியுள்ளார். காலையில் வயிறு Full-ஆ சாப்பிடுவாராம் நயன்தாரா. மதியம், காலையில் சாப்பிட்டதில் பாதியும். இரவு, மதியம் சாப்பிட்டதில் பாதியும் தான் சாப்பிடுவாராம். குறிப்பாக, இரவு நேர உணவை மாலை 7 மணி முதல் 8 மணிக்குள் முடித்து விடுவாராம் நயன்

பழங்கள், முட்டை, காய் கறிகள் , கொஞ்சம் மாமிசம் ஆகியவற்றை விரும்பி சாப்பிடும் இவர் வெள்ளை சர்க்கரை மற்றும் Sweetsகளை தவிர்த்து விடுவாராம்.

Views: - 23

0

0