“ஐயோ, நயன் கைய விடவே மாட்டுறாரே…” நயன்தாராவுடன் தனி விமானத்தில் வந்து இறங்கிய விக்னேஷ் சிவன் !

16 June 2021, 10:00 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த விஸ்வாசம், பிகில், மூக்குத்தி அம்மன் திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படம் சரியாக போகவில்லை. தற்போது அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. மோடிக்கு பிறகு அதிகமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார் நயன்தாரா விக்னேஷ் சிவன். போர் அடிக்கும்போதெல்லாம் Bag எடுத்து மாட்டிகிட்டு எங்கையாவது கிளம்பி போறத வழக்கமாக வைத்திருக்கும் இந்த காதல் ஜோடியின் நெருக்கமான புகைப்படங்களை அடிக்கடி பார்க்கலாம்.

அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். விமான பயணத்தின் போது எடுத்த நெருக்கமான புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பெருமையா பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஐயோ, நயன் கைய விடவே மாட்டுறாரே…” என்று கமென்ட் அடித்து கேலி செய்கிறார்கள்.

Views: - 326

8

2