“விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல் இன்னும் ஒரு வருஷம் கூட தாங்காது” – பிரபல நடிகர் Open Talk !

25 February 2021, 10:36 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த விஸ்வாசம், பிகில், மூக்குத்தி அம்மன் திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படம் சரியாக போகவில்லை. தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. மோடிக்கு பிறகு அதிகமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார் நயன்தாரா விக்னேஷ் சிவன். போர் அடிக்கும்போதெல்லாம் Bag எடுத்து மாட்டிகிட்டு எங்கையாவது கிளம்பி போறத வழக்கமாக வைத்திருக்கும் இந்த காதல் ஜோடியைப் பற்றி ஒரு கிசுகிசு வந்துள்ளது.

இந்நிலையில் பத்திரிகையாளரும், காமெடி நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நயன்தாரா, விக்கி காதல் பற்றி பேசியிருக்கிறார்.
அதில், நயன்தாரா, விக்னேஷ் சிவனின் காதல் இன்னும் ஓராண்டு கூட தாக்குப் பிடிக்காது, பிரிய வாய்ப்புகள் இருக்கு என்று கூறியிருக்கிறார். பயில்வான் ரங்கநாதனின் பேச்சு நயன்தாரா ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.

Views: - 1237

2

0