கண்ணே கண்ணே உன்னை தூக்கி கானா தூரம் போகட்டா – நஸ்ரியா வெளியிட்டுள்ள புகைப்படத்தை கொஞ்சிக் கொண்டிருக்கும் ரசிகர்கள்
28 January 2021, 8:33 pmதமிழ் சினிமாவில் ஒன்று அல்லது இரண்டு படம் நடித்தாலும் கேரளத்தில் இருக்கும் ரசிகர்கள் அளவு தமிழகத்திலும் இருப்பது நஸ்ரியாவிற்கு மட்டும்தான். சின்ன வயதிலிருந்தே பாட்டு பாடுவது, நடிப்பது என கலக்கிக் கொண்டிருந்தவர்.
தனது பெரிய கண்களால், அப்பாவித்தனமான முகத்தால் ரியாக்சன்களை காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ள நஸ்ரியா, மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கூட நேரம் படத்தில் நடித்தவர், அதன் பின் தன்னோடு பல வயது மூத்தவரான பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார்.
இவர் திருமணம் செய்து கொண்டதால் பல இளைஞர்கள் மட்டுமில்லாமல் இளம் பெண்களும் சோகத்தில் மூழ்கினர். இருந்தாலும் அவ்வப்போது படங்களில் நடித்தும் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆற்றுப்படுத்தி வரும் நஸ்ரியா,
தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதைப் பார்த்து இளைஞர்கள் மீண்டும் அவர் மீது காதலில் விழுந்து, கண்ணே கண்ணே உன்னை தூக்கி கானா தூரம் போகட்டா என கொஞ்சி வருகின்றனர்.
0
0