ஏஐ தொழில்நுட்பத்தில் பாடல்கள்; எனக்கு பிடிக்கலப்பா; ஓப்பனாக சொன்ன பாடகி நீத்தி,..

Author: Sudha
12 July 2024, 4:24 pm

நீத்தி மோகன் தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர்.வித்தியாசமான அனைவரும் விரும்பும் குரல்வளம் உடையவர்.தமிழில் ‘தெறி’ படத்தில் ‘செல்லக் குட்டி’, ‘ஐ’ படத்தில் ‘மெர்சலாயிட்டேன்’, ‘லிங்கா’ படத்தில் ‘மோனா கேஸோலினா’ போன்ற பாடல்களைத் தன்னுடைய பாணியில் கணீர் குரலில் பாடி கவனம் ஈர்த்தவர்.

செயற்கை நுண்ணறிவு (AI) இப்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பமாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்போது பல பாடல்கள் வெளியாகியுள்ளன.

இது பற்றி பேசிய பாடகி நீத்தி மோகன், “இன்று AI தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் கால் பதிக்கத் தொடங்கிவிட்டது.இசைத் துறையிலும் பல்வேறு வகையில் பயன்பட்டு வருகிறது. AI, ரோபோடிக்ஸ் போன்று எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும் இசைக் கலைஞர்கள், பாடகர்களின் தனித்தன்மையை அதில் கொண்டு வரமுடியாது.பாடகர்கள் தங்களின் இதயத்திலிருந்து உணர்வு பூர்வமாக ஆன்மாவிலிருந்து பாடலைப் பாடுகிறார்கள்.அந்த ஆழமான உணர்வை ஒருபோதும் தொழில்நுட்பத்தால் சாத்தியப்படுத்த முடியாது” என்று கூறியிருக்கிறார்.

மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் பம்பா பாக்கியா, ஷாஹுல் ஹமீது குரல்களை ஏஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்த குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றது குறித்தும் பேசியவர், ” முறையாக அனுமதி பெற்றது பாராட்டத்தக்க விஷயம். ஆனால், மறைந்தவர்களின் குரலை பயன்படுத்துவதில் சில சட்டப்பிரச்னைகளும் இருக்கின்றன.

சிலர் அதை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது. இனி வரும் காலங்களில் இதற்குத் தெளிவான சட்ட வரையறைகளைக் கொண்டு வர வேண்டும். என்னதான் இருந்தாலும் AI தொழில்நுட்பம் கலையை அந்நியப்படுத்துகிறது வித்தியாசமாய் உணர வைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை” என்று கூறியிருக்கிறார்.

  • vijay does not come out after 6 o clock said by suriya siva 6 மணிக்கு மேல விஜய் வெளில வரமாட்டார்; இதுதான் ரகசியம்- வம்பிழுத்த அரசியல் பிரபலம்