நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம் – SJ சூர்யா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் சாம்ராஜ்யம் !

6 March 2021, 9:28 am
Quick Share

2016 ஆம் ஆண்டு இந்த படத்தை இயக்க ஆரம்பித்து 2017 – எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருந்த நிலையில் ஆனால் நம்ம கெட்ட நேரம் இந்த அருமையான படத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்க நேர்ந்தது.

சரி, கதைக்கு வருவோம்…பெரிய கோடீஸ்வரன் ஆன ராமசாமி (எஸ்.ஜே. சூர்யா) வீட்டுக்கு குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு வருகிறார் அப்பாவி பெண் மரியம் (ரெஜினா கசாண்ட்ரா). அங்கே ரெஜினாவை பார்த்ததும் ஆசைப்படுகிறார் (எஸ். ஜே. சூர்யா), அவரை அடைய நினைக்கும் முயற்ச்சியில் ரெஜினா இறந்து போகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தனக்கே உரிய முத்திரை பதித்து மிரட்டி இருக்கிறார் செல்வராகவன்.

ஆதிகால கதையான இந்த படத்தில், ட்விஸ்ட்கள், திகில் என எதுவும் இல்லாமல் வெறும் நார்மல் ஆன திரைக்கதையில் படம் பயணிக்கிறது. கதை, திரைக்கதையில் லேசாக கோட்டைவிட்ட செல்வராகவன், ஒவ்வொரு நடிகர்களையும் வேற லெவலில் நடிக்க வைத்ததற்கு செல்வராகவனுக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட். அதிலும் எஸ்ஜே சூர்யாவின் அசுர நடிப்புக்கு ஒரு ஜே….இல்லை பத்தாது ஒரு பூங்கொத்தும் கொடுக்க வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் அவர் பேசும் வசனங்களும், அவர் பண்ணும் காமெடிகளும் Whistle ரகம். இறைவி, ஸ்பைடர் வரிசையில் இந்த படமும் அவரின் நடிப்பிற்கான மைல்கல். மேலும் நந்திதா ஸ்வேதா, ரெஜினா மற்றும் துணை கதாபாத்திரங்களின் நடிப்பும் படத்திற்க்கு மிகப்பெரிய பலம்.

செல்வராகவன் படங்கள் என்றாலே ஏகப்பட்ட புரியாத காட்சிகள் இருக்கும்.. இந்த படத்திலும் அந்த மாதிரி புரியாத காட்சிகள் அங்கும் இங்குமாக இருக்கிறது.

பாடல்கள் ஏற்கனவே பல வருடங்கள் முன் ரீலீஸ் ஆகி Hit ஆன நிலையில், யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையிலும் சிலிர்க்க வைக்கிறார் (KING OF BGM) -‌ன்னா சும்மாவா ?.. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன விதம் தெறி…அதிலும் கண்ணுங்களா.. கண்ணுங்களா பாடல் திரையரங்கில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதம்.. ஒலிப்பதிவு… திகில் இல்லாத கதைக்கு பலம் சேர்கிறது.

முதல் பாதி முழுக்க Applause அள்ளும் விதமாக காட்சிகள் நகர்ந்தாலும், இரண்டாம் பாதி பரவால்லை ரகம். ஆக இந்த படம் செல்வாவின் முந்தைய படங்களை போல் ( மயக்கம் என்ன வரை) திரும்ப திரும்ப பார்த்து ரசித்த அளவுக்கு இந்த படம் இருக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக ” SJ சூர்யாவின் நடிப்புக்காகவும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்காகவும்” எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று சொல்லலாம் .

பிளஸ் பாய்ண்ட்ஸ் :

  • வெறித்தனமான முதல் பாதி
  • நடிகர்களின் அசுர நடிப்பு
  • யுவன் ஷங்கர் ராஜாவின் இசை
  • ஒளிப்பதிவு
  • ஒலிப்பதிவு

*பாடல்கள் படமாக்கப்பட்ட முறை

மைனஸ் பாய்ண்ட்ஸ்

  • வழக்கமான கதை
  • இரண்டாம் பாதி
  • CG

Views: - 2

4

0