கீர்த்தி முதல் நயன்தாரா வரை…தட்டி தூக்கிய ‘நெட்பிளிக்ஸ்’…கொத்தா இறங்கிய அப்டேட்கள்..!

Author: Selvan
5 February 2025, 5:27 pm

OTT-யில் வெளியாகும் அதிரடி அப்டேட்கள்

சமீப காலமாக பல படங்கள் திரைக்கு வராமல் நேரடியாக OTT-தளங்களை குறிவைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.அதிலும் குறிப்பாக பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் தளத்தில் திரைப்படங்கள் மற்றும் பல வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.அந்த வகையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அக்கா

சமீபத்தில் ‘அக்கா’ வெப்தொடரின் டீசரை வெளியிட்டது.இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.சமீப காலமாக கவர்ச்சியில் மின்னும் கீர்த்தி சுரேஷ்,இந்த தொடரிலும் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.விரைவில் இதனுடைய அறிவிப்பு தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டப்பா கார்டெல்

ஜோதிகா நிமிஷா சஜயன் ஷாலினி பாண்டே ஷபானா ஆஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள டப்பா கார்டெல் வெப் தொடரும் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.5 பெண்களை சுற்றி நடக்கின்ற கதையாக இந்த தொடர் உருவாகியுள்ளது.

மண்டலா மர்டர்ஸ்

பாலிவுட்டில் கலக்கி வரும் வாணி கபூர் நடித்துள்ள மண்டலா மர்டர்ஸ் வெப் தொடரின் டீசரை சமீபத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது.முழுவதும் கிரைம் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இத்தொடர்,ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழும் நயன்தாரா தற்போது பல படங்களில் முன்னணி ரோலில் நடித்து வருகிறார்.அந்த வகையில் கிரிக்கெட்வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் டெஸ்ட் படத்தில் நயன்தாரவுடன் மாதவன் சித்தார்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீசரை சமீபத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது.மேலும் இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக OTT-யில் வெளியாகிறது.

இதுமட்டுமில்லாமல் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல தெலுங்கு மற்றும் பாலிவுட் வெப்தொடர்களை இந்த வருடம் ரிலீஸ் செய்ய இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.இதனால் OTT ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?