நா அங்க வீடு வாங்க கூடாதா?.. தனுஷின் குட்டி ஸ்டோரியை கும்மாங் குத்து குத்தும் நெட்டிசன்ஸ்..! (Video)

Author: Vignesh
24 July 2024, 2:40 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

dhanush - updatenews360

தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் ரூ.150 கோடி செலவில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது. ரஜினிகாந்த் வசித்து வரும் அதே போயஸ் கார்டனில் தனுஷ் திடீரென இத்தனை கோடிகள் செலவு செய்து வீடு கட்டியதற்கு காரணம் என்ன என்று பலரின் மத்தியில் கேள்வி எழுந்தது.

dhanush - updatenews360

இந்நிலையில், ராயன் ஆடியோ லாஞ்சில் பேசிய நடிகர் தனுஷ் நான் யாருன்னு எனக்கு தெரியும். என்னை படைத்த அந்த சிவனுக்கும், என் அப்பா, அம்மாவுக்கும் என் பசங்களுக்கும் என் ரசிகர்களுக்கும் தெரியும் என்று தன்னை பற்றி பின்னாடி பேசுபவர்கள் பற்றிய முதுகில் குத்துபவர்கள் பற்றியும் பேசி இருந்தார். மேலும், ரஜினி, விஜய் குட்டி ஸ்டோரி சொல்வது போல போயஸ் கார்டனில் ஏன் பல கோடியில் வீடு வாங்கி கட்ட ஆசைப்பட்டேன் என்ற ரகசியத்தையும் மேடையிலே ரசிகர்கள் முன் பேசியிருந்தார்.

dhanush - updatenews360

அதாவது தலைவர் வீட்டை பார்க்க போயஸ் கார்டனுக்கு சென்றபோது, போலீஸ் அண்ணன்கள் சிலர் இருந்தார்கள். அவர்களிடம், தலைவர் வீடு எங்கே என்று கேட்டதற்கு அங்கேதான் இருக்கு சைலண்டா பாத்துட்டு போயிறணும் என்றார்கள். அப்படியே, நானும் தலைவர் வீட்டை பார்த்துவிட்டு திரும்பினேன். ஆனால், அங்கே இன்னொரு வீட்டுக்கு முன் ஜே ஜேன்னு கூட்டம், அது யாரு வீடுன்னு கேட்டால், ஜெயலலிதா அம்மா வீடுன்னு சொன்னார்கள். அப்படியே வியந்து போய் இந்த பக்கம் ரஜினி சார் வீடு அந்தப் பக்கம் ஜெயலலிதா அம்மா வீடு நடுவில் நாம வீடு கட்டினால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன் என்று தனுஷ் கூறியவுடன் அரங்கில் இருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து விட்டனர்.

இப்படி தனுஷ் பேசிய அந்த பேச்சுக்கு அங்கிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தாலும், நெட்டிசன்கள் அவரை எஸ்தளத்தில் கழுவி ஊற்றி தான் வருகின்றனர். ரஜினி, ஜெயலலிதா போன்றவர்கள் எந்தவித பின்புறமும் இல்லாமல் வந்து சினிமாவில் சாதித்தவர்கள். ஆனால், தனுஷ் தந்தையின் தயவால் சினிமாவுக்கு ஈசியாக வந்துவிட்டு இப்படி அவர்களோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், மற்றொரு பதிவில் மனசில ரஜினின்னு நெனைப்பு, தனுஷ் சும்மா சீன் போடுறான் என அவரை திட்டி வருகின்றனர். மேலும், சிலர் தனுஷ் சினிமாவில் நல்ல நடிகர்னு தெரியும் நிஜத்திலுமா என்று கேள்வி எழுப்பி திட்டி திர்த்து வருகின்றனர்.

  • Bhuvaneshwari spiritual journey திடீரென ஆன்மிகத்தில் குதித்த கவர்ச்சி நடிகை : இதெல்லாம் ரொம்ப தப்புமா..கவலையில் ரசிகர்கள்..!
  • Views: - 123

    0

    0