நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே அப்படி என்ன பிரச்சனை? இன்ஸ்டா பதிவால் ஏற்பட்ட களேபரம்!
Author: Prasad8 July 2025, 7:49 pm
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வலம் வரும் நிலையில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே எதுவும் பிரச்சனையா? என கேள்வி எழுந்துள்ளது
வைரல் காதல் ஜோடி
தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது “மூக்குத்தி அம்மன் 2”, “ஹாய்”, “ராக்காயி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தான் பல வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆம் ஆண்டு கரம் பிடித்தார் நயன்தாரா. அதனை தொடர்ந்து வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தைவக் என் சிவன் என பெயர் வைத்தது கவனத்தை குவித்தது. விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தனது குழந்தைகளுடன் வலம் வரும் புகைப்படங்கள் பல இணையத்தில் அவ்வப்போது வைரலாகியும் வருகின்றன.

நயன்தாரா பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி?
இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டதாக ஒரு இன்ஸ்டா பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில், “குறைவான அறிவுடைய ஒருவரை நீங்கள் திருமணம் செய்தால் அந்த திருமணம் மிகப்பெரிய தவறாக மாறும். உங்கள் கணவருடைய செயல்பாடுகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல. என்னை விட்டுவிடுங்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
ஆனால் நயன்தாராவின் இன்ஸ்டா ஸ்டோரியில் இப்பதிவு காணப்படவில்லை. நிஜமாகவே நயன்தாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இப்படி ஒரு பதிவை பகிர்ந்திருந்தாரா? அல்லது இது போலியாக உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
போக்சோ வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ஜானி மாஸ்டருடன் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆன பொழுதுதான் இந்த ஸ்கிரீன்ஷாட்டும் வைரலானது குறிப்பிடத்தக்கது.