கிழிச்சு போட்டு கூட்டிட்டு வரது தான் Fashion’னா? அம்மா நடிகையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!

Author:
27 July 2024, 10:30 am

தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகை மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் தேவதர்ஷினி. இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

முதன் முதலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கை துவங்கிய தேவதர்ஷினி அதன் பிறகு மர்ம தேசம் மற்றும் அத்திப்பூக்கள் தொடர்களின் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் . அத்திப்பூக்கள் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். திரைப்படங்களில் பல முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார். காஞ்சனா திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் ஃபேவரட்டான நடிகையாக மக்கள் மனதில் பிடித்தார் .

தேவதர்ஷினி சேத்தன் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நியாதி கடம்பி என்ற ஒரு மகள் இருக்கிறார். நியாதி 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளமாக பார்க்கப்பட்டது .

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் வாய்ப்புகள் தேடி வரும் நியாதி கடம்பி படு கிளாமரான உடைகளை அணிந்து பொது விழாக்களில் கலந்து கொண்டு வருவது முகம் சுளிக்க வைத்துள்ளது. அந்த வகையில் ரகு தாத்தா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேவதர்ஷினி தனது மகளுடன் வந்திருந்தார்.

அப்போது அவரது மகள் கிழிந்த கவர்ச்சியான உடையில் படு ஹாட்டாக தொடை கவர்ச்சியை காட்டி அமர்ந்திருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக நெட்டிசன்ஸ் அவரை மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள். பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் டிரஸ் பண்ணனுமா? முதல்ல உங்க பொண்ணுக்கு நல்ல துணியை போட சொல்லி கொடுங்க என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…