எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு பதில் இவர்… திரை தீ பிடிக்கும் பாடலுடன் MASS-ஆக ENTRY கொடுத்த ஆதி குணசேகரன்..! (வீடியோ)

Author: Vignesh
2 October 2023, 2:30 pm
ethir neechal-updatenews360
Quick Share

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பாரம்பரிய முறைப்படி உறவினர்கள் முன்னைலையில் உடல் தகனம் செய்து உள்ளனர்.

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து TRP’யில் முதல் இடத்திலும் சமூகவலைகளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்த மாரிமுத்து இறந்துவிட்டதால் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்பது குறித்த சமீபத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதன் படி அடுத்த குணசேகரனாக பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க போகிறார் என்ற செய்திகள் வெளியானது.

ethir neechal-updatenews360

தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரம் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், ராமமூர்த்தி ஆதி குணசேகரன் ஆக மீண்டும் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். அது குறித்த பிரமோ வீடியோ தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. இதில், வேல மூர்த்தியின் முகத்தை காட்டவில்லை என்றாலும், அது அவர்தான் என உறுதியாக கூற முடிகிறது. மாரிமுத்துவை போல் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல மூர்த்தி கலக்குவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 453

2

0