பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூட்யூபர் இர்ஃபான்? ஒரு மனுஷன் எத்தனை சர்ச்சைலதான் சிக்குவாரு?
Author: Prasad21 May 2025, 1:53 pm
ஆபரேஷன் சிந்தூர்
பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை தொடுத்தது இந்திய இராணுவம். அதனை தொடர்ந்து பாகிஸ்தானும் பதிலடி கொடுக்க இரு நாட்டு எல்லைகளுக்கிடையே போர் மேகம் சூழ்ந்தது.
அதன் பின் சில நாட்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த போரில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து 12 யூட்யூபர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற யூட்யூபரின் டைரிக்குறிப்புகளை கைப்பற்றியது போலீஸார்.

அந்த டைரியின் மூலம் இவர் பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தெரியவந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல யூட்யூபர்கள் மற்றும் சமூக வலைத்தள இன்ஃப்ளுவன்சர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இர்ஃபான் உளவு பார்த்தாரா?
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த யூட்யூபர் இர்ஃபான் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக பேச்சுக்கள் அடிபடுகிறதாம். எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளிவரவில்லை. ஆனால் இச்செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவ பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன பாலினம் என்பதை அறிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட இர்ஃபான், அதனை தொடர்ந்து ரமலான் பண்டிகை அன்று சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு பணமும் உடையும் அளித்தபோது ஏற்பட்ட தகராறில் அவர்களை மோசமாக பேசியது சர்ச்சைக்குள்ளானது. இவ்வாறு பல சர்ச்சைக்குள் சிக்கி வரும் இர்ஃபான், தற்போது பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக கூறப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.