கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தின் இயக்குனருக்கும், ஹீரோயினுக்கும் கல்யாணம் !

26 January 2021, 2:17 pm
Quick Share

2019ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். துல்கர் சல்மானின் 25வது படமான இப்படத்தில் ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனா மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். இதில் ரிது வர்மா தோழியாக நடித்திருந்த நிரஞ்சனா மாநிறமாக இருந்தாலும் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டார். அவரைப்பற்றி நிறைய பேரு இணையதளத்தில் தேட தொடங்கினர். நிறைய பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர தொடங்கினார்கள்.

அப்படிப்பட்ட ரசிகர்களை கொண்ட நிரஞ்சனாவிற்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை தான் நிரஞ்சனா திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இந்த செய்தியை திருமண பத்திரிக்கையோடு பகிர்ந்து இருக்கிறார்கள் இந்த ஜோடி. இந்த செய்தியை தேசிங்கு பெரியசாமி முதன் முதலில் துல்கரிடம் தான் சொன்னாராம். பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி இவர்கள் திருமண தேதியை முடிவு செய்திருக்கிறார்கள். திரையுலக பிரபலங்களும் நண்பர்களுக்கும் மட்டுமின்றி ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Views: - 5

0

0