இப்போ பீல் பண்ணி என்ன பண்றது… 16 வயதினிலே படத்தில் முதலில் நடிக்கவிருந்த ஹீரோயின் இவங்களா?..
Author: Vignesh15 பிப்ரவரி 2024, 7:42 மணி
நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.
நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
இந்நிலையில், கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே மூலம் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டது என்று சொல்லலாம். இந்த படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ரஜினி பரட்டை என்ற கதாபாத்திரத்திலும், கமல் சப்பானி என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரீதேவி மயில் என்ற கதாபாத்திரத்தலும் நடித்திருந்தார்.
அந்த மூன்று கதாபாத்திரங்களுமே மூன்று பேருக்குமே சினிமா பயணத்தில் நல்ல ரீச் கொடுத்திருந்தது. இந்த நிலையில், ஸ்ரீதேவி நடித்திருந்த மயில் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகை நிரோஷா தானாம். சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நிரோஷா இது தொடர்பாக பேசி இருந்தார்.
0
0