மருமகளுக்கு ஆடம்பர பரிசுகளை அள்ளிக்கொடுத்த நீதா அம்பானி- ஒவ்வொன்றும் இத்தனை கோடியா!

Author: Rajesh
25 February 2024, 5:43 pm

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரின் மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில ஆண்டுகள் காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.

ராதிகா மெர்ச்சந்த் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். வருகிற மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை இந்த திருமண கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் நடைபெறவுள்ளது. இத்திருமணத்தில் உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சந்திற்கு நீதா அம்பானி பல கோடி கணக்கில் பரிசுகளை அள்ளிக்கொடுத்துள்ளார்.

வெள்ளியில் செய்யப்பட்ட லக்ஷ்மி – விநாயகர் சிலை, இரண்டு வெள்ளி துளசி மாடம், வெள்ளி லட்சுமி-கணேஷ் சிலைகள், வெள்ளி தூபக் குச்சிகள் அடங்கிய பூஜை அறை பொருட்கள். நிச்சயதார்த்த நாளில், சுமார் ரூ. 4.5 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீட் கார் உள்ளிட்ட பல கோடிகள் மதிப்பு கொண்ட பரிசுகள் வழங்கியுள்ளார். திருமணத்திற்கு முன்பே இம்புட்டு பரிசுகளா என நெட்டிசன்ஸ் வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?