இத்துணூண்டு பாட்டில் இத்தனை லட்சமா..தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீதா அம்பானி..!

Author: Vignesh
30 May 2024, 10:59 am
nita ambani Gold water bottle
Quick Share

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரின் மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில ஆண்டுகள் காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.

ராதிகா மெர்ச்சந்த் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை இந்த Pre Wedding கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் நடைபெற்றது. இத்திருமணத்தில், உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்காக நீதா அம்பானி மிகவும் காஸ்ட்லியான நகைகள் அணிந்திருந்தார்.

nita ambani

அவர் அணிந்திருந்த மரகத கல் மற்றும் வைரம் பதித்த அந்த நெக்லஸ் மட்டும் ரூபாய் 400 கோடி முதல் 500 கோடி இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோ இந்த பணத்தை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் படமே எடுத்தரலாமே என்று தெரிவித்து வந்தனர்.

nita ambani Gold water bottle

இப்போது, நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் ட்ரெண்டாகி உள்ளது. நீதா அம்பானி குடிப்பதுதான் உலகின் மிக உயர்ந்த தண்ணீர் என்றும் கூறப்படுகிறது. மேலும், குடிநீருக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தண்ணீர் பாட்டிலை அவர் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாட்டிலின் மதிப்பு 49 லட்சம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பாட்டில் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது. இதில், உலகின் விலை உயர்ந்த நீர் இந்த பாட்டிலில் உள்ளது.

nita ambani Gold water bottle

இந்த நீரில் 24 கேரட் தங்க துகள்கள் கலந்து இருக்குமாம். குறிப்பாக நீதா அம்பானி அருந்தும் நீரில் 24 கேரட் தங்க துசிகள் கலந்து இருக்குமாம். அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிப்யூடோ ஏ மோடிக்லியானி எனப் பெயரிடப்பட்ட உலகின் விலையுயர்ந்த நீர் இந்த பாட்டிலில் உள்ளது. இதைக் குடிப்பதன் மூலம், ஒருவரின் சருமத்தை எப்போதும் புதுப்பொலிவுடன் வைத்திருக்க முடியுமாம். இந்தத் தண்ணீர் பாட்டில் ஒரு ஏலத்தில் 60,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டது என்றும் இதன் இந்திய மதிப்பு 49 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது.

  • virat kohli தம்பி கிட்ட வாப்பா… விராட் கோலியை கை பிடித்து இழுத்து அலப்பறை செய்த Aunty – தீயாய் பரவும் வீடியோ!
  • Views: - 256

    0

    0