மெழுகு டாலு, அழகு ஸ்கூலு – கண்மணி நடிகையின் புகைப்படத்தை கொஞ்சிக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள்

31 January 2021, 11:31 pm
Quick Share

மன மன மன மெண்டல் மனதில் என தமிழக இளைஞர்கள் மனதில் கண்மணியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நித்யா மேனன். 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

அதன் பின் வெப்பம், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தார். அதன்பின் முன்னணி நாயகர்களுடனும் 24, மெர்சல், இருமுகன் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் சில படங்களில் நடித்தாலும் மலையாளத்தில் கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருக்கும் நித்யா மேனன் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். பிரீத் 2 என்ற வெப்சீரிஸில் நடித்தார்.

கைவசம் நெட்ஃப்ளிக்ஸ் இல் வெளியாகவிருக்கும் நவரச படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நித்யா மேனன், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றுவது வழக்கம். அவ்வளவாக கவர்ச்சி காட்டாத நித்யா மேனன், வெள்ளை ஆடையில் தேவதை போல போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த இளசுகள், மெழுகு டாலு நீ, அழகு ஸ்கூலு என கொஞ்சி வருகின்றனர்.

Views: - 3

0

0