“இந்த முன்னணி நடிகர் என்னை திருமணம் செய்ய சொல்லி வலியுறுத்தினார்” – போட்டு உடைத்த நித்யா மேனன் !

20 January 2021, 12:27 pm
Quick Share

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடித்து வருகிறார், இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் தன்னை அறியாமல் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் திருமணத்தைப் பற்றி கேட்டபோது, உஸ்தட் ஹோட்டல் படத்தில் நடித்தபோது துல்கரிடம் நட்பு ஆரம்பித்தது. அப்போது, என்னையும் குறிப்பிட்ட காலத்திற்குள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழையும்படி கூறி அவ்வப்போது வலியுறுத்தினார், ஆனால், எனக்கு அந்த யோசனையே இல்லை” என்றும் கூறியுள்ளார்.

Views: - 3

0

0