கடைசி வரை நான் சிங்கிள்தான்- நித்யா மேனனின் பேட்டியால் அதிர்ந்துபோன ரசிகர்கள்…

Author: Prasad
24 July 2025, 6:38 pm

Chubby நடிகை…

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரைத்துறைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழில் சமீபத்தில் “திருச்சிற்றம்பலம்”  திரைப்படத்தில் நடித்து மனதை கவர்ந்த நித்யா மேனன், அதனை தொடர்ந்து “இட்லி கடை”, “தலைவன் தலைவி” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் “தலைவன் தலைவி” திரைப்படம் நாளை ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நித்யா மேனன் தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

கடைசி வரை சிங்கிள்தான்…

“நான் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது எனது தாயாரின் மகப்பேறு விடுப்பு முடிவடைந்தது. ஆதலால் என்னை எனது பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவார். சிறு வயதில் இருந்தே நான் தனிமை விரும்பி. நண்பர்கள் இருந்தாலும் தனியாகவே இருப்பேன்.

Nithya menen open statement about her love life

குறிப்பிட்ட வயது வந்தபோது எனக்கு காதல் அனுபவமும் கிடைத்தது. எத்தனை முறை காதலில் விழுந்தேனோ அத்தனை முறை எனது இதயம் நொறுங்கிப்போனது. அந்த சமயத்தில் எனக்கு ஆத்ம துணை என்று ஒருவர் வேண்டும், அவருடன் அழகான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை. இப்போது அந்த உணர்வுகளில் இருந்தெல்லாம் வெளியே வந்துவிட்டேன்” என நித்யா மேனன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “தனியாக பயணம் செய்கிறேன். என் வேலைகளை நானே செய்கிறேன். சில நேரங்களில் எதுவும் செய்யாமல் இருந்துவிடுகிறேன். அப்படி இருக்கும்போது என்னை நானே அறிந்துகொள்ள முடிகிறது. எனக்கு பொருள் சார்ந்த எதிலும் நாட்டம் இல்லை. நடிப்பு என் தொழில் என்பதால் இங்கே இருக்கிறேன். அதை தாண்டி சினிமாவில் மோகம் என்று எதுவும் இல்லை. நான் ஆன்மிக பயணத்தை மேற்கொள்கிறேன். இதன் மூலம் வாழ்க்கையின் பலவற்றிற்கு பதில் கிடைத்துள்ளது” எனவும் கூறியுள்ளார்.

“திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என கூறவில்லை. சரியான துணை கிடைத்தால் நாளையே கூட திருமணம் செய்துகொள்வேன். ஆனால் இந்த தனிமை வாழ்க்கை மகிழ்ச்சியை தருகிறது” என நித்யா மேனன் அப்பேட்டியில் கூறியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!