இட்லி கடையில் சாணி அள்ளிய நித்யா மேனன்!
தனுஷ் இயக்கி நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை Dawn Pictures நிறுவனம் தயாரித்துள்ளது. முதலில் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் தான் சாணி அள்ளிய சம்பவத்தை குறித்து நடிகை நித்யா மேனன் சமீபத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சாணி அள்ளிய கையால் தேசிய விருது!
நடிகை நித்யா மேனன், “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்திற்காக சிறந்த தேசிய விருதை பெற்றார். இந்த நிலையில் நித்யா மேனன் இது குறித்து பேசியபோது, “இட்லி கடை படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது வெறும் கையால் சாணி அள்ளினேன். தேசிய விருது வாங்க செல்வதற்கு முந்தைய நாள் அதனை செய்தேன். நான் தேசிய விருது பெறும்போது என் விரல் நகங்களில் அந்த சாணி இருந்ததை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என பகிர்ந்துகொண்டார். இவ்வளவு ஓபனாகவா இதனை பேசுவது? என நெட்டிசன்கள் நித்யா மேனனை விமர்சித்து வருகின்றனர்.
