பிரேமம் நடிகரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டாங்களே? ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த வீடியோ!
Author: Prasad4 June 2025, 7:01 pm
லோகேஷ் கனகராஜின் புதிய படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கைதி”, “விக்ரம்”, “லியோ” ஆகிய திரைப்படங்கள் Lokesh Cinematic Universe-க்குள் அடங்கிய திரைப்படங்களாக வெளிவந்தன. அந்த வகையில் இதனை தொடர்ந்து LCU-ல் உருவாகி வரும் திரைப்படம்தான் “பென்ஸ்”. இத்திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். சாய் அப்யங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை இத்திரைப்படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகர் குறித்தான அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என [படக்குழுவினர் அறிவித்தனர். அந்த வகையில் தற்போது இது குறித்தான வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
LCU-ல் நிவின் பாலி

அதாவது “Benz” திரைப்படத்தில் வால்டர் என்ற கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார். இது குறித்து வெளியான அறிவிப்பு வீடியோவில் நிவின் பாலி இரத்தம் தெறிக்க தெறிக்க என்ட்ரி கொடுக்கிறார். இவரது கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. தற்போது இந்த அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், “காதல் நாயகனை இப்படி இரத்தம் தெறிக்க தெறிக்க நடிக்க வைக்கிறீங்களே” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.