அப்போ ரோஜா சீரியலுக்கு END CARD இல்லையா? ரோஜா சீரியல் நடிகர் போட்ட பதிவு.. இல்லத்தரசிகர்கள் குஷி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2022, 4:48 pm

சன் டிவியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பிரைம் டைமில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. காதலை மையமாக வைத்து எடுத்த முதல் சீரியல் இது தான். இதில் அர்ஜூன் கதாப்பாத்திரத்தில் நடிகர் சிப்பு சூரியனும், ரோஜா கதாப்பாத்திரத்தில் நடிகை நல்கர் பிரியங்கா-வும் நடித்து வந்தனர்.

இவர்களின் ஜோடிக்காகவே ரோஜூன் பேன்ஸ் பல பேர் இருந்தனர். இந்த சீரியல் நாளை முடிவுக்கு வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே இந்த சீரியல் முடிவடையப் போகிறது என்று தகவல்கள் வெளிவந்தது. அதனால் அவர்களுடைய ரசிகர்கள் அனைவரும் முடிக்க வேண்டாம் என்று பல வேண்டுகோளை வைத்திருந்தனர்.

இந்நிலையில் அந்த சீரியலில் பாலு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் தேவ் என்பவர் ஒரு பதிவு செய்துள்ளார். கதைப்படி நேற்றைய எபிசோடில், பாலுவின் கதாப்பாத்திரம் முடிவுக்கு வந்திருந்தது. உண்மையில் மெயின் வில்லன், வில்லிகளை எல்லாம் விட்டு விட்டு, அவர் சா வு வ து போல் கதையை கொண்டு போயிருந்தனர்.

அதுவே அடுத்த சீரியலுக்கு லீடாக இருக்குமோ? என்று அனைவரும் யோசிக்க, அவரும் அந்த போஸ்டில், ரோஜா சீரியல் என்னால் மறக்க முடியாது. முடிந்த அளவுக்கு, இதே டீமுடன் விரைவில் சந்திக்கலாம். அதுவரை, எங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.

அதைப் பார்த்த ரோஜா சீரியல் நடிகர்கள் அனைவரும், சீசன் 2 வரவில்லை என்றாலும், சிபு அண்ட் நல்கர் பிரியங்கா-வை வைத்து சீரியல் எடுத்தால், நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

  • Archana and Arun love story காதலர் தினத்தில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் அர்ச்சனா…வைரலாகும் வீடியோ.!