கோவா பீச்சில் ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் : நடிகை பூனம் பாண்டேவுக்கு நிபந்தனை ஜாமீன்..!!

6 November 2020, 12:47 pm
poonam pandey - updaptenews360
Quick Share

கோவாவின் சபோலி அணையில் ஆபாச வீடியோவை படமாக்கியதற்காக கைது செய்யப்பட்ட நடிகை பூனம் பாண்டேவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் கவர்ச்சியை தாராளமாக வழங்கி வரும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் பூனம் பாண்டே. அவ்வப்போது, தனது ஆபாசப் படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய அணி உலகக்கோப்பை வென்றால் நிர்வாணமாக ஓடுவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே, பூனம் பாண்டே, சாம் பாம்பே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற நிலையில், தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாகக் கூறி, அவரை போலீசில் சிக்க வைத்தார். பிறகு, இருவரும் சமரசம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழலில், கோவாவின் சபோலி அணையில் ஆடைகளை கழற்றி ஆபாச வீடியோவை எடுத்தற்காக, பூனம் பாண்டே மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தடைசெய்யப்பட்ட அரசாங்க இடத்தில் வீடியோவை படமாக்க நடிகையை அனுமதித்ததாக ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது கணவருக்கும் கனாகோனா மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. தலா ரூ.20 ஆயிரம் செலுத்தி சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் இருவரும் கோவாவிலேயே தங்கி தொடர்ந்து 6 நாட்களுக்கு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 40

0

0