தண்ணீர்தான் சாப்பாடு- வறுமையின் கொடுமைக்கு தள்ளப்பட்ட சந்தானம் பட  நடிகை!

Author: Prasad
14 May 2025, 2:33 pm

நடிகைகள் செழிப்பானவர்களா?

நடிகைகள் என்றால் செல்வசெழிப்போடு வாழ்பவர்கள் என்ற எண்ணம் பொதுவாக பலரிடமும் உண்டு. ஆனால் அதெல்லாம் அவர்களின் மார்க்கெட் எகிறும்போதுதான். சில நடிகைகள் சினிமாற்குள் நுழைவதற்கு முன்பு வாழ்க்கையில் வறுமையால் அல்லாடப்பட்டிருப்பார்கள். அந்த வகையில் ஒரு பிரபல நடிகை சமீபத்தில் கொடுத்த பேட்டி ரசிகர்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தண்ணீர் குடித்து உயிர்வாழ்ந்தேன்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நுஷ்ரத் பருச்சா. இவர் 2002 ஆம் ஆண்டு “கிட்டி பார்ட்டி” என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு “ஜெய் சந்தோஷி மா” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின் பல பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கிய நுஷ்ரத், சந்தானம் நடித்த “வாலிப ராஜா” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

nushrratt bharuccha told that she drank water when she was hungry

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நுஷ்ரத், “கல்லூரி காலத்தில் நிதி பிரச்சனையால் அதிகளவு பாதிக்கப்பட்டேன். நான் ஒரு கல்லூரியில் 5  வருடங்கள் படித்தேன். தினமும் அந்த கல்லூரிக்குச் சென்று வர எட்டு ரூபாய் மட்டுமே செலவழிப்பேன். எனக்கு பசி ஏற்படும்போது கல்லூரியில் இலவசமாக இருந்த தண்ணீரை குடித்துதான் பசியை போக்கினேன். எனது அப்பா அவரது தொழிலில் ஏமாற்றப்பட்ட பிறகு நான் சம்பாதிக்கும் பணத்தை கவனமாக பார்த்துக்கொள்கிறேன்” என மிகவும் மனம் நொந்தபடி பேசியுள்ளார். இப்பேட்டி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

  • pradeep ranganathan dude title have trouble பிரதீப் ரங்கநாதன் பட தலைப்புக்கு வந்த சிக்கல்? ஸ்டார்ட்டிங்லயே End Card போட்டாங்களே?
  • Leave a Reply