ஒரே ஒரு ஆடியோ Launch : மொத்த கேரியரும் Close..சிக்கலில் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2021, 11:18 am
Ashwin- Updatenews360
Quick Share

கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என குக்வித் கோமாளி புகழ் நடிகர் அஸ்வின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் நுழைவது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் வெள்ளித்திரையில் சுலபமாக நுழைந்து விடுகின்றனர்.

சின்னத்திரையில் நுழைபவர்கள் தங்களது நடிப்பு, கவர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு காரணமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகின்றனர். அப்படி சுலபமாக வெள்ளித்திரையில் வந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

குறிப்பாக, சிவகார்த்திகேயன், சந்தானம், முகின், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, ஆரவ் உட்பட ஏராளமானோர் நுழைந்த பட்டியல் உள்ளது. அப்படி இருக்க விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி. இந்த சீசனில் சிவாங்கியுடன் இணைந்து அஸ்வின் அதகளப்படுத்தியிருப்பார்.

அஸ்வினுக்கு ஏராளமான ரசிகர்கள் மட்டுமல்லாமல் ரசிகைகளும் உண்டு. அவர் நடித்த ஆல்பமான குட்டி பட்டாசு பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் சக்கை போடு போடுகிறது. இதன் காரணமாக சுலபமாக வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.

முதல் படமாக ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் என்ன சொல்ல போகிறாய். இதில் அஸ்வின் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜூ அஸ்வினி, புகழ் உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

Meet 'Cook with Comali' star Ashwin Kumar: The man you know, the journey  you don't - The Hindu

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று பேசினர்.

Enna Solla Pogirai (2022) Movie Cast, Teaser, Songs, Trailer, Release Date  - MoviesPie.Com

அப்போது பேசிய அஸ்வின் குமார், ரசிகர்களின் அன்பால் இங்கு நிற்பதாகவும், நீங்கள் தரும் அன்புதான் என்னை வளர்த்துள்ளது. நான்கனவு கண்டிருக்கிறேன் ஆனால் இந்த இடத்தில் வருவேன் என நினைக்கவில்லை.

இந்த படத்திற்கு முன் பின் என் வாழ்க்கையை பிரிக்கலாம், விஜய் தொலைக்காட்சி எனக்கு மாபெரும் திருப்பத்தை தந்துள்ளது. ஒரு காமெடி நிகழ்ச்சி இவ்வளவு பிரபலம் ஆகும் என நினைத்து கூட பார்க்கவில்லை என கூறினார்.

Ashwin: Silambarasan TR sir personally called and wished me!

மேலும் பேசிய அஸ்வின், என்னிடம் கெட்ட பழக்கம் உள்ளது, கதை கேட்கும் போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன், 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன், நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை தான் ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும் என கூறினார்.

இவர் பேசிய பேச்சை கேட்ட சினிமா வட்டாரங்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். முதல் படம் ரிலீஸ் ஆவதற்குள் இந்த பேச்சு பேசலாமா, எத்தனையோ இயக்குநர்கள் சினிமாவில் நுழைந்து முதல் படத்தை இயக்க முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இயக்குநர்களை கொச்சைப்படுத்தும் விதமாக திமீராக அஸ்வின் பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

எடுத்த உடனே 40 இயக்குநர்கள் வந்து கதை சொன்னதாக இவர் தான் கதை விடுகிறார் என விபரம் தெரிந்தவர்கள் குமுறியுள்ளனர். சினிமாவின் நுழையும் போது நாவடக்கம் தேவை என பிரபல இயக்குநர் சவுக்கடி கொடுத்துள்ளார்.

Ashwin Kumar Lakshmikanthan movies, filmography, biography and songs -  Cinestaan.com

தேவையில்லாமல் பேசியதால் பெரும் சர்ச்சையான நிலையில், ஒரே ஒரு ஆடியோ லான்ச்சால் மொத்த கேரியரும் இல்லாமல் போகும் நிலை ஏற்படுமோ என்ற பயம் அஸ்வினுக்குள் எழுந்துள்ளது.

Views: - 287

0

1