இளம் பெண்ணுக்கு கருணாநிதியின் மகன் வீட்டில் நடந்த கொடூரம்.. சீறிய இயக்குனர் பா.ரஞ்சித்..!(வீடியோ)

Author: Vignesh
19 January 2024, 3:12 pm

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளம் பெண் ரேகா பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான கருணாநிதியின் மகன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து தன்னை தொடர்ந்து பல விதங்களில் அடித்து துன்புறுத்தினார்கள் என்றும், கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எந்தவித பாரபட்சமின்றி தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம் பெண் ரேகா மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக பா ரஞ்சித் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில், அவர் பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடூர சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்! என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக 18 வயது நிரம்பாத அந்த இளம் பெண் வேலையில் சேர்ந்த இரண்டு நாளில் வீட்டு வேலை செய்ய முடியவில்லை எனக்கு இங்கு செட் ஆகல என்று கூறி இருக்கிறார். பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் அந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைக்காமல் நீ இங்கிருந்து வேலை செய்து ஆக வேண்டும் என்று சொல்லி துன்புறுத்தி இருக்கிறார்கள். மேலும், மருமகள் மெர்லின் அந்தப் பெண்ணை உடலளவில் மிகவும் துன்புறுத்தி இருக்கிறார். கையில் கிடைத்ததை எல்லாம் வைத்து அடிப்பது மிளகாய் தூள் போட்டு தண்ணீரை குடிக்க வைப்பது சூடு வைப்பது என ஒரு மன நோயாளியை போல் அந்த பெண்ணை தாக்கி இருக்கிறார்.

pa-ranjith-updatenews360

அந்த பெண் உடலளவில் காயப்பட்டு கொண்டிருப்பதை தெரிந்தும், பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான கருணாநிதியின் மகன் ஆன்டோ அதை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். தற்போது, ரேகா அந்த வீட்டை விட்டு வெளியேறி தனக்கு நடந்த அத்தனை துயரங்களையும் அநீதிகளையும் மீடியாவுக்கு முன்பு தைரியமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இதை தொடர்ந்து, பல அரசியல் கட்சி தலைவர்களும் இப்போது, இந்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!