புஷ்பா போன்ற படங்களால் சீரழியும் இளைஞர்கள்..! புஷ்பா படத்தினை விளாசிய பிரபலம்..!

Author: Rajesh
7 February 2022, 7:43 pm

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் புஷ்பா திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல தெலுங்கு இலக்கியவாதி கரிகாபதி நரசிம்ம ராவ் தனியார் தொலைக்காட்சியில், ‘புஷ்பா’ படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில், ‘புஷ்பா’ போன்ற படங்கள் தான் சமூகத்தில் நடக்கும் பல அக்கிரமங்களுக்கு முக்கியக் காரணம் அமைகிறது. இளைஞர்களுக்கு ஒரு மோசமான முன்னுதாரணத்தை இப்படம் விதைக்கிறது. ஒரு கடத்தல்காரனை ஹீரோவாக முன்னிறுத்துகிறது. படத்தில் யாரையாவது அடித்து வீழ்த்தி, ‘நான் யாருக்கும் அடங்காதாவன்’ என்பவரை மாஸ் ஹீரோ எனக் ரசிகர்களும் கொண்டாடுகின்றனர். படத்தில் இருப்பது போன்று யாராவது ஒருவர் ரோட்டில் போகும் ஒருவரை அடித்துவிட்டு அப்படிச் சொன்னால், இப்படத்தின் இயக்குநரோ அல்லது ஹீரோவோ அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்களா? இப்படம் மட்டுமல்ல பொழுதுபோக்கு என்ற பெயரில் பல படங்கள் இந்த முட்டாள்த்தனத்தை செய்கின்றன.’ என்று கடுமையாக கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!