தளபதி பாடலுக்கு ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் – வைரலாகும் வீடியோ

25 January 2021, 6:54 pm
Quick Share

இல்லத்தரசிகளின் மோஸ்ட் பேவரிட் தொடராக மாறி வருகிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஆனந்தம், வானத்தைப்போல படங்களைப் போல அண்ணன் தம்பிகள் கதையை வைத்து எடுத்து வருவதால் இந்த தொடருக்கு குடும்பத் தலைவிகள் மட்டுமல்லாமல் இளைஞர்களிடமும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இதில் தம்பிகளில் ஒருவராக வரும் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் வெங்கட் ரங்கநாதன். மதுரை வட்டார பேச்சு வழக்கை நன்றாக பேசுவதால் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மட்டும் இல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா நாடகத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது தொடரில் ஜோடியாக நடித்துவரும் ஸ்மிருதி காஷ்யப் உடன் சேர்ந்து தளபதி விஜய் நடித்த ஜில்லா படத்தில் வரும் கண்டாங்கி கண்டாங்கி பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இதை ஸ்மிருதி காஷ்யப் சமூக வலை தளத்தில் பதிவிட்டு, வெங்கட் விஜயின் தீவிரமான ரசிகர் என கூறியுள்ளார். வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 9

0

0