‘அரபிக்குத்து’க்கு செம குத்து குத்திய சீரியல் நடிகை சுஜிதா வாயை பிளந்த ரசிகர்கள் !!

Author: kavin kumar
7 March 2022, 4:12 pm

சுஜிதா ஒரு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார் . இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ” பாண்டியன் ஸ்டோர்ஸ் ” என்ற பிரபலமான தொடரில் நடித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே சினிமாவிலயும் சீரியல் தொடர்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் .

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

நடிகை சுஜிதா தற்போது சீரியல்களில் நடிப்பதுமட்டுமில்லாமல் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்போது பீஸ்ட் படத்தின் ‘அரபிக்குத்து ‘ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

https://vimeo.com/685399828

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?