ராகவா லாரன்ஸ் படத்துல அட்ஜெஸ்மெண்ட் செய்தால் வாய்ப்பு: சின்னத்திரை நடிகை ஓபன் டாக்..!!

Author: Vignesh
3 April 2023, 11:45 am

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

pandian stores aishwarya

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகை படவாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்கள் என கூறிய தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ், குடும்பத்தை பிரித்து தன்னுடைய கணவரை தனியாக அழைத்து சென்று வாழ்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா என்கிற தீபிகா.

pandian stores aishwarya

தீபிகா ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடித்து விட்டு, அழகில்லை என வெளியேற்றப்பட்டு, மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில், சமிபத்தில் தீபிகா கொடுத்த பேட்டியில் அதிர்ச்சியளிக்கும் ஒரு உண்மையை தெரிவித்திருக்கிறார்.

குறித்த பேட்டியில், “தான் முதலில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த ஆடிசனில் கலந்து கொண்ட போது, அங்கு யாரும் இல்லை என்றும், ஒரு ஆள் மட்டும் தான் இருந்தார் எனவும், அங்கிருந்தவர் தன்னை பார்த்து முத்த காட்சிகள் தான் அதிகம் இருக்கிறது.

இதனால் முத்தம் கொடுத்து செய்து காட்ட வேண்டும்” என கேட்டார். இதனை கேட்ட தான்,“இப்படி தன்னால் நடிக்க முடியாது வேறு காட்சிகள் இருந்தால் நடிக்கிறேன் என்று கூறிய போது, தற்போது தான் சுமார் 8 பெண்கள் இப்படி நடித்து சென்றிருக்கிறார்கள் என்று கூறியதாகவும்,

pandian stores aishwarya

உங்களுக்கு மட்டும் வேறு காட்சி கொடுக்க முடியாது”என தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது, ஆடிசன் என்ற பெயரில் இப்படி பெண்கள் துஷ்பிரயோகம் செய்வது தற்போது பேஷனாகி விட்டது என நெட்டிசன்கள் கமண்ட் செய்து வருகிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?