ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!
Author: Prasad9 May 2025, 7:54 pm
சூர்யா பட வில்லன்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர் பரேஷ் ராவல். இவர் ஒரு பிரபல பாலிவுட் நடிகர் ஆவார். அதுமட்டுமல்லாது இவர் பாஜகவைச் சேர்ந்தவர். முன்னாள் மக்களவை எம்.பி. ஆகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இவர் தனது காயத்தை குணப்படுத்த சிறுநீரை குடித்ததாக கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

இப்படி ஒரு வைத்தியமா?
ஒரு நாள் பரேஷ் ராவலின் காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். அப்போது பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன் பரேஷ் ராவலை நலம் விசாரிக்க வந்தாராம். அப்போது அவர், “நீ தினமும் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக உனது சிறுநீரை நீ அருந்து. உனக்கு எந்த உடல் நலப் பிரச்சனையும் வராது. இந்த காயமும் ஆறிவிடும்” என கூறினாராம்.
அவர் கூறியபடியே பவேஷ் ராவலும் தினமும் காலை எழுந்தவுடன் சிறுநீரை அருந்த துவங்கினாராம். சிறுநீர் அருந்தும்போது ஏற்படும் அருவருப்பை தவிர்க்க அதனை மதுபானம் போல நினைத்து அருந்தினாராம். கிட்டத்தட்ட 15 நாட்கள் அருந்திய பிறகு அதிசயமாக அவரது காயம் ஆறத்துவங்கிட்டதாம். இதனை பார்த்து மருத்துவர்களே ஆச்சரியப்பட்டுப்போனார்களாம். இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆன நிலையில் மருத்துவர்கள் பலரும் இந்த மருத்துவ முறை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது, இதனை யாரும் பின்பற்றவேண்டாம் என அறிவுரைக்கின்றனர்.