அஜித்,விஜய் குறித்த கேள்வி…நடிகர் பார்த்திபன் சொன்ன கலக்கலான பதில்…வைரலாகும் வீடியோ..!

Author: Selvan
30 January 2025, 2:12 pm

பார்த்திபன் சொன்ன நச் பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நேற்று தனது புது படத்தின் ஷூட்டிங் அனுமதிக்காக புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை தனியாக சந்தித்து பேசினார்.

இதையும் படியுங்க: உங்க பொண்ண அனுமதிப்பீர்களா…”பேட் கேர்ள்” டீசரால் சர்ச்சையில் சிக்கி தவிக்கும் விஜய்சேதுபதி..!

சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,என்னுடைய படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதுச்சேரியில் நடக்க இருப்பதால் அரசு அனுமதியை பெற இந்த சந்திப்பு என கூறினார்.

Parthiban interview latest news

மேலும் பத்திரிகையாளர் ஒருவர் விஜய் மாநாட்டின் போது நீங்கள் உங்கள் வேலையே விட்டு வாங்க என்று கூறினார்,மேலும் நடிகர் அஜித் உங்க குடும்பத்தை முதலில் பாருங்க என ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.இதை நீங்கள் எப்படி பார்கிறீர்கள் என கேட்ட போது,அதற்கு பார்த்திபன் அஜித் குடும்பத்தை பாருங்கன்னு சொன்னது சரியான விசியம்,சில பேர் அவுங்களுடைய குடும்பத்தை பற்றி சிந்திக்காமல் அஜித் வாழ்க என கோஷம் போடுகின்றனர்,அவர்களுக்காக அஜித் அவ்வாறு கூறியுள்ளார்,மேலும் விஜய் அரசியல் அது அவருடைய தனி போக்கு,ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஐடியா இருக்கும் அது வழியே அவர் செல்கிறார்,நான் யாருடனும் இணைந்து பணியாற்றமாட்டேன்,எனக்கென்று ஒரு தனி அரசியல் பார்வை உள்ளது,அது இப்போ சொல்ல மாட்டேன்,இப்போ என்னுடைய போக்கில் நான் போறதுதான் நல்லது என கூறுவார்.

மேலும் சீமான் பெரியார் குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்த அவர் பெரியரி நீக்கிவிட்டு இங்கு அரசியல் பண்ண முடியாது,அதனால் தான் சீமானும் பெரியாரை வைத்துக்கொண்டு அரசியல் செய்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!