கமலின் “பத்தல பத்தல”.. விக்ரம் படத்தின் First Single வெளியானது.!

Author: Rajesh
11 May 2022, 7:25 pm
Quick Share

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.

இப்படத்தின் டீஸரும், க்ளிம்ப்ஸும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ரசிகர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. விக்ரம் படத்தில் கமலுக்கென்று ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. இந்த ஃப்ளாஷ்பேக் காட்சி ஏற்கனவே கமல் நடிப்பில் வந்த விக்ரம் பட கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது அதனை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவுப்படுத்தும் விதமாகவோ இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் மே மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தில் இடம்பெற்றிருக்கும் பத்தல பத்தல என்ற பாடல் இன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்தப் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் எழுதி, பாடியிருக்கும் இந்தப் பாடலை அவரது ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

Views: - 629

1

0