பவித்ரா லட்சுமியை ஜெயிக்க வைத்து அழகு பார்த்த புகழ்: 5ஆவது ஃபைனலிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2021, 12:18 pm
Pugazh Parvathi Lakshmi - Updatenews360
Quick Share

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்ட பவித்ரா லட்சுமி வைல்டு கார்டு மூலமாக வந்து தற்போது 5ஆவது ஃபைனலிஸ்டாக வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளிக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 14 ஆம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 2 ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், பாபா பாஸ்கர், அஸ்வின் குமார், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கனி, ஷகீலா, தீபா, மதுரை முத்து மற்றும் வைல்டு கார்டு மூலமாக ரித்திகா ஆகியோர் குக்குகளாக கலந்து கொண்டனர். இவர்களுடன் இணைந்து பாலா, மணிமேகலை, பப்பு, விஜே பார்வதி, புகழ், சக்தி, சரத் ராஜ், ஷிவாங்கி, சுனிதா, டைகர் தங்கதுரை ஆகியோர் கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு சமையல் நிகழ்ச்சியை இப்படி காமெடியாக கொடுக்கும் முடியும் என்றால் அது விஜய் டிவியால் மட்டுமே முடியும் என்று அண்மையில் சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சிக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில், பவித்ராலட்சுமி, தர்ஷா குப்தா மற்றும் ரித்விகா ஆகியோருடன் புகழ் செய்து வந்த அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பார்ப்பவர்களை ரசிக்க வைத்தது. இவ்வளவு ஏன், மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சிக்கு புகழ் பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறான் என்று நடுவர்கள் கூட தெரிவித்தனர். எப்போது பார்த்தாலும் பவி, தர்ஷா என்றே புகழ் கூறிக்கொண்டிருந்தார்.

இந்நிகழ்ச்சியில் நடனமும் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார். அவர் ஒரு டான்ஸர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கடந்த இரு வாரங்கள் பவித்ராலட்சுமி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியின் மூலமாக எலிமினேட் செய்யப்பட்டார்.
இதையடுத்து இன்றைய நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலமாக பவித்ரா லட்சுமி, ரித்திகா, ஷகீலா, தர்ஷா குப்தா, மதுரை முத்து, தீபா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு சென்ற பாபா பாஸ்கர், அஸ்வின் மற்றும் கனி ஆகியோர் இன்றைய நிகழ்ச்சியில் சமையல் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

வைல்டு கார்டு மூலமாக வந்த போட்டியாளர்களுக்கு மட்டுமே இன்று சமையல் டாஸ்க் கொடுக்கப்பட்ட து. இதில், புகழ் உடன் இணைந்திருந்த பவித்ரா லட்சுமி முதலில் கொக்கூர் தி நதீர் டாஸ்க் செய்தார். இது டிஸ் நன்றாக வரவே, அடுத்து இறுதிப் போட்டிக்கு செல்லும் டாஸ்க் செய்தார். அது செட்டிநாடு சிக்கன் செய்யும் டாஸ்க். இதில், ரித்திகாவும் இடம் பெற்றார். இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற பவித்ரா லட்சுமி 5ஆவது ஃபைனலிஸ்டாக இறுதிப் போட்டிக்கு சென்றார். இது அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸாக அமைந்தது.

Views: - 228

0

0