காலேஜ் Professor உடன் காதல்… காருக்குள்ளே கசமுசா – பிரபல சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
2 August 2023, 10:33 am

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போதெல்லாம் பலகோடி போட்டு எடுக்கப்படும் திரைப்படம் போன்று சீரியல்களை பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிடுகிறார்கள். அதில் பல சீரியல்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து TRP’யின் உச்சத்தில் இருந்து வருகிறது.

ஆனால், ஒரு சில சீரியல்கள் அதற்கு எதிர்மறையாக இருக்கிறது. ஆம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் மக்களின் வெறுப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. கிராமத்தில் பிறந்து வளரும் ஹீரோயின் வெண்ணிலாவிற்கு படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என கனவோடு இருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு திருமணம் செய்துவைக்க வீட்டில் திட்டமிட்டு ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

இதனால் அவர் வீட்டை விட்டு ஓடி வந்து கல்லூரியில் படிக்கிறார். அந்த கல்லூரியின் பேராசிரியர் மீது அவருக்கு காதல் வர இருவரும் வெளியில் எங்கும் சந்தித்தால் மாணவி – ஆசியருடன் காதல் என்பது கொச்சையாக பார்க்கப்படும் என்பதால் காருக்குள்ளேயே காதல், ரொமன்ஸ் எல்லாம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஹீரோ சூர்யா வெண்ணிலா கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும்போதே திடீரென தாலி கட்டிவிடுகிறார்.

இதனால் அவர்களுக்குள் சின்ன சண்டை ஏற்படுகிறது. பின்னர் வெண்ணிலாவை சமாதானம் செய்து கிராமத்திற்கு கூட்டி வரும்போது ஒரு ரவுடி கும்பலிடம் மாட்டிக்கொண்டு காரை வைகோல் புத்தருக்குள் கொண்டு விடுகிறார். அதில் முழு காரும் ஒளிந்துக்கொள்ள அவர்கள் பல நாட்களாக காரிலே குடும்பம் நடத்துகிறார்கள். அவ்வளவு ஏன் ஹீரோயின் குளிக்கவேண்டும் என்று சொல்ல ஹீரோவும் அதற்கு காருக்குள்ளே ஏற்பாடு செய்து குளியலும் போடுகிறார்கள்.

மேலும் கதையை எப்படி நகர்த்துவதென்றே தெரியாமல் காருக்குள்ளேயே பல நாட்களாகவே காட்சிகள் ஓட்டுகிறது. இதனை நெட்டிசன்ஸ் விமர்சித்து காருக்குள்ளேயே குடும்பம் நடத்தி குளியல் போட்டுட்டாங்களே என பங்கமாக ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர். அத்தோடு இவர்கள் பண்ணும் ரொமான்ஸ் பார்க்க சகிக்கவில்லை. எனவே நலன் மனசு வச்சி அந்த சீரியலை இத்தோடு நிறுத்திக்கொண்டாள் அவங்களுக்கும் நல்லது பார்க்கும் மக்களுக்கும் நல்லது என பலர் கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!