தக் லைஃப் திரைப்படத்திற்கு அனுமதி? அரசாங்கம் வெளியிட்ட திடீர் அறிக்கை!

Author: Prasad
4 June 2025, 1:55 pm

தடை கண்ட தக் லைஃப்

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது” என கூறியதை தொடர்ந்து கர்நாடகாவைச் சேர்ந்த பல கன்னட அமைப்புகளும் அரசியல்வாதிகளும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். 

மேலும் தனது பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் , இல்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்வோம் எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கமல்ஹாசன் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட கர்நாடக பிலிம் சேம்பர் தடை விதித்துள்ளது. 

இந்த தடையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் கமல்ஹாசன். இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறினீர்கள். நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? அல்லது மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் தக் லைஃப் படம் ஏன் வெளியாக வேண்டும் என நினைக்கிறீர்கள்? ரூ.300 கோடி செலவில் படம் எடுத்துள்ளதாக கூறும் நீங்கள் ஒரு மன்னிப்பு கேட்பதால் என்ன?” என்றும் கேள்வி எழுப்பியது. 

permission give for thug life movie special shows

இதனை தொடர்ந்து கர்நாடகா பிலிம் சேம்பரின் தலைவர் நரசிம்மலுவுக்காக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் கமல்ஹாசன். அதில் “தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தை குறித்து அன்பின் மிகுதியால் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நம் அனைவரும் ஒன்று, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதைத்தான் எனது பேச்சுக்கள் குறிப்பிட்டனவே தவிர அதில் கன்னட மொழியை குறைத்து பேசியதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. 

தமிழை போலவே கன்னட மொழியும் பெருமைக்குரிய கலாச்சார பண்பாடு கொண்டவை. கன்னடர்கள் என் மீது காட்டிய அன்பை நான் நேசித்து வருகிறேன். கன்னடர்கள் தங்களது கன்னட மொழி மீது வைத்திருக்கும் அன்பை நான் பெரிதும் மதிக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் அக்கடிதத்தில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை கூட இடம்பெறாத நிலையில் கர்நாடகா நீதிமன்றம், “மன்னிப்பு கேட்கச் சொன்னால் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள்? கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை கூட இல்லையே? மன்னிப்பு கேட்பதில்  கமல்ஹாசனுக்கு என்ன ஈகோ?” என்றும் கேள்வி எழுப்பியது. 

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “தவறு செய்தால்தானே மன்னிப்பு கேட்க வேண்டும். தவறாக புரிந்துகொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க?” என்று கூறினார். இவ்வாறு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க தயாராக இல்லாத நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் வெளியீடு கர்நாடகா மாநிலத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

permission give for thug life movie special shows

தக் லைஃப் படத்திற்கு அனுமதி

இவ்வாறு கர்நாடகாவைத் தவிர்த்து உலகமெங்கும் “தக் லைஃப்” திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு நாளை ஒரு நாள் மட்டும் “தக் லைஃப்” திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது காலை 9 மணி காட்சியில் இருந்து நள்ளிரவு இரண்டு மணி வரை காட்சி வரை நாளை ஒரு நாள் மட்டும் 5 காட்சிகளை திரையிர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இச்செய்து கமல்ஹாசன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

  • vetrimaaran suriya combo vaadivaasal movie dropped கைவிடப்பட்ட வாடிவாசல்? சூர்யாவுக்கு டாட்டா காண்பித்து வேறு நடிகருக்குத் தாவிய வெற்றிமாறன்?
  • Leave a Reply