முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!
Author: Prasad5 July 2025, 5:30 pm
பீனிக்ஸ் விழான்?
விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. இத்திரைப்படத்தை ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார்.
இதில் சூர்யா சேதுபதியுடன் வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்காக தன்னுடைய 60 கிலோ எடையை குறைத்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் சூர்யா சேதுபதி. எனினும் இத்திரைப்படம் மிகவும் நெகட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகிறது. படத்தில் ஆக்சன் காட்சிகளை தவிர மற்ற எந்த காட்சிகளும் சுவாரஸ்யமாக இல்லை என படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.

குப்புற கவிழ்ந்த பீனிக்ஸ்?
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “பீனிக்ஸ்” திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.10 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும் சூர்யா சேதுபதி நடந்து கொண்ட விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இது இத்திரைப்படத்தின் வசூலில் பிரதிபலித்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் நாளை விடுமுறை நாள் என்பதால் இத்திரைப்படத்தின் வசூலில் சற்று முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.