10 நிமிடத்தில் தயாரான பாடல் : நெகிழ்ந்து போன வைரமுத்து!!

Author: Vignesh
3 November 2022, 6:15 pm

கனவே கலையாதே, மகிழ்ச்சி ஆகிய திரைப்படங்களை இயக்கியிருப்பவர் கவுதமன். டிவி சீரியல்களையும் இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் வெளியான சந்தனக்காடு சீரியல் பெரும் ஹிட்டானது.

தொடர்ந்து படங்களை இயக்கி வரும் கவுதமன், தமிழர் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார் கவுதமன். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

ரெட்மி டிவிகளில் இருந்து சிறந்த விற்பனையாளர்களை, உங்கள் குடும்பத்திற்கு ஒரு பொழுதுபோக்கின் தொகுப்பை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்! அதிக தள்ளுபடி விலையில் ஷாப்பிங் செய்து பலன்களைப் பெறுங்கள்.

இப்படத்தில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதமனுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் மூவரும் விவாதித்து உற்சாகமாக பாட்டு கட்டி வருகின்றனர்.

G.V.Prakash -updatenews360-1

அதனை தனது கவிதை மொழியில் குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து, அவர் பதிவிட்டிருப்பதாவது, ஜி.வி.பிரகாஷ் வீடு
கெளதமன் படத்துக்குப்
பாட்டுக் கட்டுகிறோம்

மகிழ்ச்சியின் இழைகளில்
நெய்யப்படுகிறது பாட்டு

“வஞ்சிக்கொடியே வாடி – நீ
வளத்த பொருளத் தாடி

பாசத்த உள்ளவச்சுப்
பாசாங்க வெளியவச்சு
வேசங்கட்டி வந்தவளே

வெறும்வாய மெல்லுறியே”

பத்தே நிமிடத்தில்பாட்டு
பிரமாதம் பிரகாஷ்! என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷையும் பாராட்டியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?