Parking பஞ்சாயத்து.. சவுண்ட் சரோஜா ரேஞ்சுக்கு சண்டை போட்ட சரண்யா..! CCTV காட்சிகள் வெளியீடு..!

Author: Vignesh
3 April 2024, 10:09 am

ISO முத்திரை பதித்த அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்து வருகிறார். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்து ஆரம்பத்தில் 1980களில் ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பின்னர், திருமணத்திற்கு பின்ன சில ஆண்டுகள் சினிமாவிற்கு கேப் விட்டிருந்த அவர் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் ஹீரோக்களின் அம்மா வேடத்தில், நடித்து பெரும் புகழ் பெற்றார். அப்படி அவர் அம்மாவாக நடித்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்கள் ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி, வேலையில்லா பட்டதாரி, கிரீடம், தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது.

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

இந்நிலையில், சரண்யாவின் வீடு சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் தான் உள்ளது. இவருடைய வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ஸ்ரீதேவி என்பவர். இப்படி இருக்கும் நிலையில், ஸ்ரீதேவி தன்னுடைய கேட்டை திறந்த போது சரண்யாவின் காரை உரசுவது போல் சென்றிருக்கிறது. இதனால், ஆத்திரம் அடைந்த சரண்யா அவருடன் தகராற்றில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த கேட் 20 அடி நீளம் இருக்கிறது. கேட்டை திறந்த உடனே அப்போது வெளியில் இருந்த சரண்யா காரை ஸ்ரீதேவியின் இரும்பு கேட் வேகமாக நகர்த்துவது உரசுவது போல் வந்திருக்கிறது.

இதனால், இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சரண்யாவின் குடும்பத்தினர் ஸ்ரீதேவி மீது மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதனை அடுத்து சரண்யா குடும்பத்தினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஸ்ரீதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சரண்யா தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து தன்னை மிரட்டுவதாக சிசிடிவி ஆதாரங்களையும் புகாரில் இணைத்து இருக்கிறார் ஸ்ரீதேவி.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அப்போது, சரண்யா அவர்கள் ஸ்ரீதேவி மீது புகார் அளித்திருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து CCTV காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில், சரண்யா நான்ஸ்டாப்பாக கைகளை நீட்டி ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், பொன்வண்ணனும் வந்து ஏதோ பேசுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ், சாந்தமான சரண்யாவா இப்படி ரௌடி பேபியாகவும், சவுண்ட் சரோஜா ரேஞ்சுக்கு சண்டைப் போடுவதாகவும், கமெண்ட்டுகளை ஷேர் செய்து வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?