எஸ்பிபி சிகிச்சை பெறும் மருத்துவமனை முன் போலீசார் குவிப்பு ! கடவுளுக்கே வெளிச்சம் !

25 September 2020, 12:41 pm
Quick Share

பிரபல பாடகர் எஸ்பிபி CORONAவில் இருந்து முழுவதுமாக குணமாக வேண்டி வீடு திரும்ப வேண்டும் என்று நாடு முழுவதும பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மருத்துவமனை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவாக இருப்பதாகவும், முன்பைவிட மோசமாக இருக்கிறது என்று அறிவித்துள்ளது.

மேலும் பாடகர் எஸ்பிபி சிகிச்சை பெறும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். எஸ்பிபி மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி, தங்கை எஸ்பி சைலஜா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள். நேற்று கமல்ஹாசன் அவர்கள் எஸ்பிபி அவர்களை சந்தித்து செய்தியாளர்களை சந்தித்தார். தற்போது மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.