மெய்மறந்து ஜெய்பீம் பட பாடலை பாடிய காவலர் : இசையமைப்பாளரின் நெகிழ்ச்சி பதிவு… வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2022, 1:37 pm

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 2-ம் தேதி ஜெய் பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மையப்படுத்தி ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு சமூகத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் இடம்பெற்ற பக்கம் தான் பக்கம் தான் நிழல் நிக்குதே என்ற பாடலை காவலர் ஒருவர் மெய்மறந்து பாடுகிறார்.

இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஷாம் ரோல்டன் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து இது போதும் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!