ரேஸ் நடிகரின் சூட்டிங்கின் போது கேமராவை தூக்கிச் சென்ற போலீஸ் : படப்பிடிப்பு நிறுத்தம்.. சைலண்ட் மோடில் பிரபல தயாரிப்பு நிறுவனம்!!

Author: kavin kumar
4 August 2022, 9:55 pm
AjithkuamrAK61
Quick Share

ரேஸ் நடிகரின் சூட்டிங்கின் போது கேமராவை தூக்கிச் சென்ற போலீஸ் : படப்பிடிப்பு நிறுத்தம்.. சைலண்ட் மோடில் பிரபல தயாரிப்பு நிறுவனம்!!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அந்த மூன்றெழுத்து நடிகருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. ரசிகர்களின் எதிர்காலத்திற்காக ரசிகர் மன்றத்தையே கலைத்த அந்த நடிகரின் அடுத்த படத்திற்கான சூட்டிங் சென்னை அருகே நடைபெற்றது.

அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு வந்த போலீசார் கேமராவை தூக்கிக் கொண்டு சென்றுவிட்டனர். அதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது.

விசாரித்ததில் தமிழ் சினிமாவை தனது கைக்குள் வைத்திருக்கும் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சமீபத்தில் நடித்த கருத்துள்ள படத்தை எடுத்தவர்தான் தற்போது ரேஸ் நடிகர் நடித்துக்கொண்டிருக்கும் படத்துக்கும் தயாரிப்பாளர்.

இதனால் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேமராவை ஒப்படைக்க சொல்லி கேட்டுள்ளனர். அவரோ இதோ பேசுகிறேன் என கூறியவர் அதன் பின் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

இந்த விஷயம் பெரியதாகி, ரேஸ் நடிகரின் பெயருக்கு களங்கம் வந்துவிடும் என்பதற்காக பாதியிலேயே படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு கிளம்பிவிட்டது.

பின்னர் ஒரு வழியாக போராடி அடுத்த நாள்தான் அந்த கேமராவை மீட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

Views: - 449

0

0