“அரசியல் கட்சி தொடங்க போவதில்லை, அந்த எண்ணம் துளி கூட இல்லை” – ரஜினிகாந்த் அதிகாரபூர்வ அறிவிப்பு

12 July 2021, 12:21 pm
Rajini No Politics -Updatenews360
Quick Share

அரசியல் கட்சி ஆரம்பிக்க போவது இல்லை என்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரஜினிகாந்த் அறிவித்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் ரஜினி மக்கள் மன்றம் எப்போதும் போல செயல்படும் என்றும் கூறினார்.

மேலும் இன்று காலையில் சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து வந்த ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

இப்போது, அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று நடிகர் ரஜினி அறிவித்துள்ளார். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வரும்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை, மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

Views: - 189

1

0