இரவோடு இரவாக நடிகையை கடத்தி சென்று தாலி கட்டிய அரசியல் பிரமுகர் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2023, 1:50 pm

சினிமாவை பொறுத்த வரை காதல், கல்யாணம் எல்லாம் சகஜம்தான். ஆனால் நடிகையை கடத்தில் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் படத்தில் அவரின் தங்கையாக திரையுலகில் அறிமுகமானவர் நளினி. தொடர்ந்து நாயகியாக அப்போதைய முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

1980களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவர் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். அப்படி பணியாற்றும் போதுதான் நடிகை நளினியும் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார்.

அப்போது சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் நளினியிடம் இந்த குங்குமத்தை நெற்றியில் வைக்க வேண்டும் என கூறி ராமராஜனே நளினிக்கு வைத்துள்ளார். அப்போது முதலே ராமராஜனுக்கு காதல் தீ பற்றிக் கொண்டது.

ஆனால் இது நளினிக்கு தெரியவில்லை. அவர் கேசுவலாக விட்டுவிட்டார். ஒரு நாள் நீ அந்த உடையை உடுத்திக் கொண்டு வா, அதுதான் உனக்கு பொருத்தமாக உள்ளது என ராமராஜன் நளினியிடம் கூறியுள்ளார்.

இதையடுத்த நளினியும் அவர் சொன்ன உடையில் வந்திருக்கிறார். உடனே ராமராஜன், சொன்னதை செய்கிறாரே என் மேல் அவருக்கும் காதல் இருக்கும் என நினைத்து லவ் லெட்டர் அனுப்பியுள்ளார்.

காதல் கடிதம் மூலம் காதலை சொன்ன உடனே, நளினி கொஞ்சம் யோசித்துள்ளார். பின்னர் ஓகே என சொல்லியுள்ளார். இப்படி இவர்கள் காதல் வளர்ந்துள்ளது.

பின்னர் காதலை வீட்டில் நளினி சொல்லியுள்ளார். ஆனால் பயங்கர எதிர்ப்பு தெரிவித்ததுடன், நீ செத்துப் போ என கூறி அடித்துள்ளனர். பெற்றோர்கள் எதிர்த்த பின்தான் காதல் எனக்குள் அதிகமானது என கூறியுள்ள நளினி, வேறு வழியில்லாமல் எதிர்ப்புடன் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து இரவோடு இரவாக நளினி வீட்டிற்கு வந்த ராமராஜன், நளினியை அழைத்துக் கொண்டு போய் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்துள்ளார். பின்னர் தனது குருவான எம்ஜிஆரி அவர்கள் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் எடுத்த பேட்டியில் நளினியே கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!