பொன்னியன் செல்வன் பாகம் 2 வெளியாவதில் சிக்கல்? நடிகர்கள் கிராக்கி.. டென்சனில் இயக்குநர் மணிரத்னம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 2:30 pm

திறமையான கதை மூலம் பலரையும் கவர்ந்தவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் ஒரு வழியாக தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து சாதித்துள்ளார்.

முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. 500 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்னர்.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் வைக்க இயக்குநர் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக முக்கிய கதாபத்திரமான வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், நந்தின் ஆகிய மூன்று பேரிடம் காட்சிகளை அதிகப்படுத்த திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கதைக்கேற்றபடி தாடி, முடி எல்லாம் அதிகமாக வளர்க்க வேண்டும் என கார்த்தி மற்றும் ஜெயம்ரவியிடம் கூறியுள்ளார். ஆனால் இதற்கு முடியாது என இருவரும் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இயக்குநர் மணிரத்னம் அப்செட்டாக உள்ளதாக கூறப்படுகிறது. கதைக்கேற்றவாறு வேண்டும் என கூறியும் இருவரும் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!