பொன்னியின் செல்வனின் வேகமான சாதனை.. உலகளவில் இவ்வளவு வசூலா..?

Author: Vignesh
10 October 2022, 2:42 pm
Quick Share

ps 1_updatenews360 (2)

ps 1 updatenews360 (2)
Quick Share

கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலக அளவிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது பொன்னியின் செல்வன்.

நாளுக்கு நாள் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை படம் ரூ.395 கோடிக்கு மேல் வசூலை தாண்டியுள்ளது. பொன்னியின் செல்வன் படம் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலில் மாஸ் காட்டுகிறது. இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ.395 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மேலும், பொன்னியின் செல்வன் வசூல் கண்டிப்பாக ரூ.500 கோடியை எட்டும் என்று கோலிவுட் வட்டாரத்தால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இதனால், பொன்னியின் செல்வன் படக்குழுவும் படு சந்தோஷத்தில் உள்ளார்கள். இப்படியே வசூல் எகிறிக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிசில் பொன்னியின் செல்வன் புதிய உச்சத்தை அடையும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

Views: - 163

0

0